கொரோனாவால் பாதிக்கப்பட்டவங்க இந்த மருந்தை பயன்படுத்தலாம்! கனடா மாகாணம் ஒன்று முக்கிய அறிவிப்பு
கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்த சஸ்காட்செவன் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நிரந்த தீர்வு தடுப்பூசி மட்டுமே என்று உலகசுகாதார அமைப்பு கூறியதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி(இரண்டு முறை) போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கனடாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனடாவில் இருக்கும் Saskatchewan மாகாணம் கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நோயாளிகளுக்கு monoclonal antibodies-களை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
அதில், சில தடுப்பூசி போடாத அல்லது கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மருத்துவமனையில் சேருவதை தவிர்ப்பதற்காக monoclonal antibodies-ஐ பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது அக்டோபர் 25-ஆம் திகதி முதல் கிடைக்கும் என்று Saskatchewan சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், நவம்பர் 1 முதல் கொரோனாவிற்கான நேர்மறை சோதனை பெற்றவர்களும் ஆன்லைன் மூலம் இதை பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதே சமயம் அதற்கான தகுந்த மருத்துவரின் மதிப்பீட்டை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் ஆரம்பகால நிலையில் உள்ளவர்கள், இந்த மருந்தை ஒரு முறை நரம்பு வழியாக செலுத்தி பயன்படுத்தலாம் என்று SHA விளக்கியுள்ளது.
இது Saskatoon மற்றும் Regina-லிருந்து இருக்கும் SHA சோதனை மற்றும் சிகிச்சை தளங்கள் மூலம் மட்டுமே கிடைக்கும். தகுதியான நோயாளிகள் முதலில் மாகாணத்தின் வழக்கு விசாரணை செயல்முறை மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் கொரோனாவை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் அதற்கு தடுப்பூசி தான் நிரந்த தீர்வு எனவும், இந்த monoclonal antibodies சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சையை தொடர்ந்து 90 நாட்களுக்கு தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று SHA கூறியுள்ளடு குறிப்பிடத்தக்கது.