கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்
கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்
மொத்தம் 13 இடங்களில் குறித்த இருவரும் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் நாட்டையே நடுங்கவைத்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Saskatchewan பிராந்தியத்தில் இருவர் கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 18 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 31 வயது Damien Sanderson மற்றும் 30 வயது Myles Sanderson ஆகிய இருவரும் சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளதுடன், இதுவரை பொலிசாரிடம் அவர்கள் சிக்கவில்லை.
@RCMP
மேலும், இந்த இருவரையும் ஆபத்தான நபர்கள் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளதை அடுத்து, தற்போது அவர்கள் மீது கைதாணை பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
Myles மீது மூன்று பிரிவுகளில் முதல் நிலை கொலை வழக்கும், ஒரு பிரிவில் கொலை முயற்சி வழக்கும், அத்துமீறி நுழைதல் மற்றும் சில பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும், Damien மீது ஒரு பிரிவில் முதல் நிலை கொலை வழக்கும் ஒரு பிரிவில் கொலை முயற்சி வழக்கும், அத்துமீறி நுழைதல் உட்பட சில பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளனர்.
மொத்தம் 13 இடங்களில் குறித்த இருவரும் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
காயம்பட்டவர்கள் எண்ணிக்கை முதலில் 15 என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 18 என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.