கனடாவை மொத்தமாக உலுக்கிய கொடூர சம்பவம்... மிகவும் ஆபத்தானவர்கள் என அறிவிக்கப்பட்ட இருவர்
தொடர்புடைய இருவர், Damien Sanderson மற்றும் Myles Sanderson ரெஜினா பகுதியில் காணப்படலாம்
மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல்
கனடாவில் கண்மூடித்தனமாக கொடூர தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தொடர்பில், மிகவும் ஆபத்தானவர்கள் என பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் ஆல்பர்ட்டா மற்றும் மானிடோபா பகுதிகளிலும் விரிவடையலாம் என எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய இருவர், Damien Sanderson மற்றும் Myles Sanderson ஆகியோர் ரெஜினா பகுதியில் காணப்படலாம் என பொலிசார் கூறுகின்றனர். மேலும், ரெஜினாவில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்குமிடத்தை கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.
@RCMP
மட்டுமின்றி, தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய ரெஜினா பொலிஸ் சேவை பல கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. Saskatchewan பிராந்தியத்தில் ஞாயிறன்று பகல் ஆயுததாரிகள் இருவர் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுவருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தாக்குதல் சம்பவமானது நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான தகவலில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,.
Saskatchewan பிராந்தியத்தின் 13 பகுதிகளில் குறித்த இருவரும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 5.40 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிலர் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
ஆனால், இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் தகவல் தெரியவில்லை எனவும், தொடர்புடைய நபர்களை கைது செய்து விசாரித்தால் மட்டுமே தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.