கனடாவாழ் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் ஆறுதலையளிக்கும் முடிவு ஒன்றை எடுத்துள்ள கனேடிய நகரம்
தங்கள் உறவினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது சாம்பலை கங்கை போன்ற நதிகளில் தூவுவது இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் வழக்கம்.
கனடாவில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் தடையாக அமைய, அவர்களால் இந்தியாவுக்கும் செல்ல முடியாமல், கனடாவிலும் தங்கள் உறவினர்களின் சாம்பலை கரைக்க இயலாமல் தவித்திருந்தார்கள் உறவினர்களை இழந்தவர்கள்.
இந்நிலையில், Saskatoon நகரம், அவர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தியை அளித்துள்ளது. அதாவது, Saskatoon நகர கவுன்சில், தெற்கு Saskatchewan நதியில் தங்கள் உறவினர்களின் சாம்பலை கரைக்க அனுமதிக்கும் வகையில் வாக்களித்துள்ளது.
இந்த முடிவு தங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக Saskatchewan சீக்கிய மற்றும் இந்து சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.