வெறும் 1,000 ரூபாயில் செயற்கைக்கோள்: இனி இதற்கு நாசாவிடம் கேட்க வேண்டாம்
தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த 12 -ம் வகுப்பு மாணவர் ஒருவர் வெறும் 1,000 ரூபாயில் செயற்கைக்கோளை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
ஆயிரம் ரூபாயில் செயற்கைக்கோள்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 -ம் வகுப்பு மாணவர் ஜெயபிரகாஷ். இவர் தனது முயற்சியில் சிறிய அளவிலான செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர் தனது, இன்னர் ஆர்பிட்டல் செயற்கைக்கோள் (Inner Orbital Satellite) என்ற புராஜக்டை வெறும் ஆயிரம் ரூபாயில் செய்துள்ளார்.
அதாவது, மாணவர் ஜெயபிரகாஷ் கண்டுபிடித்த செயற்கைக்கோளானது Troposphere மற்றும் Stratosphere வரை செல்லும். அங்கு சென்று, வெப்பநிலை, அழுத்தம், உயரம், கார்பன் மோனோக்ஸைடின், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகியவற்றின் அளவுகளை எஸ்.டி.கார்டில்ல் (SD Card) -ல் பதிவிடும்.
விரைவில் வெர்சன் 2
இதன் பிறகு, அதிலுள்ள அளவுகளை எடுத்து பகுப்பாய்வு செய்து உயரத்தில் உள்ள வானின் நிலையை கண்டறிய முடியும் என்று ஜெய பிரகாஷ் கூறினார்.
மேலும், இந்த செயற்கைக்கோளின் எடையானது 155 கிராம் ஆகும். இந்த செயற்கைக்கோள் வெர்சன் 1 தான் எனவும், வெர்சன் 2 -யை உருவாக்கி வருவதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆலை மூலம் ஏற்படும் மாசுபாட்டை இதன் மூலம் நாம் கண்டறியலாம் எனவும், அதற்காக நாசா அல்லது இஸ்ரோவிடம் சென்று இதைப்பற்றி கேட்பதற்கு அவசியம் இருக்காது எனவும் ஜெயபிரகாஷ் கூறினார். மாணவரின் இந்த கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |