கசாப்பு கடையில் வேலை பார்த்து இன்று பல கோடிகளை அள்ளும் தமிழர்!
கசாப்பு கடையில் வேலை செய்தவர் இன்று பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் அவர் தான் தமிழகத்தின் கோவையை சேர்ந்த சதீஷ் வேலுமணி!
இவர் தான் பிரபலமான பிரஸ்ஸி (Frshly) நிறுவனத்தின் நிறுவனர். வறுமையான குடும்பத்தில் பிறந்த சதீஷுக்கு இளம் வயதில் நிறைவான சாப்பாடு கிடைப்பதே கனவாக இருந்தது.
ஆனாலும் கஷ்டத்துக்கு மத்தியில் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். படித்துக்கொண்டிருக்கும் போது வர்த்தக ஈடுபாடுதான் அவரை வதைத்தது. 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனக் கற்பனை செய்கிறார் சதீஷ் வேலுமணி.
கல்லூரி காலத்தில் அவரின் மதிய உணவு ஒரு முட்டை பஃப் மற்றும் டீ மட்டும் தான். உயர்ந்த லட்சத்தியத்துடன் வெளியில் வந்த சதீஷின் கனவு கடந்த 2014ல் நிறைவேறியது.
தானியங்கி இணைய இயங்குதளம் மூலம் விநியோகிக்கும், விரைவு உணவகங்களை பரீட்சார்த்த முறையில் சென்னையில் 3 இடங்களில் தொடங்குகிறார். காலப்போக்கில் புனே மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களிலும் அதனை விரிவுபடுத்தினார்.
பிரபலமான உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பிரஸ்லி, உணவுப் பொட்டலங்களை உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தானியங்கி இயங்குதளங்களில் தேவையான உணவுகளைத் தேர்வு செய்து பொத்தானை அழுத்தினால் போதும்.
இழுப்பறைகளுடன் கூடிய எந்திரத்தில் இருந்து உங்களுக்குக் குறிப்பிட்ட உணவுப் பொட்டலங்கள் கிடைத்து விடும். இதற்காக ஒவ்வொரு அவுட்லெட்டிலும் ஒரு ஊழியரை பிரஸ்லி நிறுத்தியுள்ளது தற்போது இந்த நிறுவனம் $24 மில்லியன் வருமானம் ஈட்டுகிறது.