பாட்டு பாடுனதுக்கு உடனடி கைது.., அடுத்து Mark Zuckerberg-யை தான் கைது பண்ணனும்! கஸ்தூரி விமர்சனம்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை எனவும் நீதிமன்றக் காவலில் அவரை வைக்க தேவையில்ல எனவும் கூறி விடுவித்தார்.
கஸ்தூரி விமர்சனம்
இது தொடர்பாக நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தண்ணி தொட்டியில் மலம் கலந்தவனை கண்டு பிடிக்கவில்லை. கஞ்சா விக்குறவனை தடுக்கவில்லை.
கள்ளச்சாராயம் காய்ச்சி தாலி அறுத்தவனை கண்டுக்கவில்லை, பாட்டு பாடுனதுக்கு உடனடி அரெஸ்ட்டு. திராவிட மொடல் சர்வாதிகாரியின் இரும்புக்கரம் வாழ்க.
நான்லாம் எப்பவோ பிரச்சார ஆட்டோ அலறி பல்லவி மட்டும் கேட்ட நினைவு. சாட்டை துரைமுருகன் பாடுனப்போ கூட யாருக்கும் தெரிய வரலை. அவரை கைது பண்ணப்போதான் viral ஆயிருச்சு.
WhatsApp , fb ல கள்ளத்தனம் கருணாநிதி song தான் தீ trending. அப்போ அடுத்து mark zuckerberg ஐ த்தான் கைது பண்ணனும்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |