சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை: சீமான் அறிவிப்பு
துரைமுருகன் நடத்தும் சாட்டை என்ற யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சாட்டை என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவர் சினிமா, சமூகம், குற்றங்கள் ஆகிய பல்வேறு விடயங்கள் குறித்து பேசி வருவார். இ
தில் அவர் பேசும் கருத்துகளை கட்சிக்குள் இருக்கும் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், கட்சியின் தலைமையுடனும் சாட்டை துரைமுருகன் மிக நெருக்கம் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "திருச்சி துரைமுருகன் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.
அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |