சனியின் பார்வையால் பொற்காலம்... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?
Saturn Aspect Lucky Zodiac: சனியின் வக்ர நிவர்த்தியால் ராஜயோகத்தினை பெறும் மூன்று ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சனி பகவானின் வக்ர நிவர்த்தி
ஜோதிடத்தில் நீதியின் கடவுளாக அறியப்படும் சனி பகவான் அவரவர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை வழங்குகின்றார்.
ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், தடைகள், உழைப்பிற்கான பலன்கள் என பல நிகழ்வுகளில் சனியின் தாக்கத்தினை தெரிந்து கொள்ளலாம்.
சனியின் பார்வை எந்த ராசியின் மீது விழுகின்றதோ, அது பல்வேறு மாற்றங்களை பெறுவதுடன், நீண்ட நாள் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்குமாம்.
தற்போது சனி பவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியில் சஞ்சரித்து வருகின்றார். இந்நிலையில் டிசம்பார் மாதம் 11ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகின்றார். ஜுன் 2027 வரை இதே நிலையில் இருக்கின்றார்.
சனி பகவானுக்கு 3, 7, 10 ஆகிய சிறப்பு பார்வை உள்ள நிலையில், இதனால் எந்தெந்த ராசியினர் மீது பார்வை விழுகின்றது, அவர்கள் என்னென்ன மாற்றத்தை சந்திப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சனி பகவானின் மூன்றாம் பார்வை கிடைக்கும் நிலையில், லாப ஸ்தானமான 11ம் இடத்தைக் குறிக்கும் என்பதால் பொருளாதார ரீதியான முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் வைருவதுடன், வருமானம் அதிகரிக்க புதிய வழியும் கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதுடன், விரிவுபடுத்தும் முயற்சியும் கிடைக்கும்.
பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு, அதிகமான பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் உள்ள பொருளாதார பிரச்சனை குறைந்து சேமிப்பீர் கவனம் செலுத்துவீர்கள்.

கன்னி
கன்னி ராசியினருக்கு சனியின் ஏழாம் பார்வை கிடைக்கும் நிலையில், திருமணம், கூட்டுத் தொழில், ஒப்பந்தம் இவற்றினை குறிக்கும் இடமாக இருக்கின்றது.
கன்னி ராசியினரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், நிலுவையில் உள்ள ஒப்பந்தம் சாதகமாகவே முடியும்.
தொழிலில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், புதிய தொழில் திட்டத்தில் கவனமாக செயல்படுத்த வேண்டும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், பணியிடத்தில் கூடுதலான பொறுப்புகளும் கிடைக்கும். வாழ்க்கையில் கருத்து வேறுபாடு குறைந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
எதிலும் அவசரம் இல்லாமல் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. பண விடயங்கள், தொழில் ஒப்பந்தம் இவற்றில் கவனமாக இருக்கவும்.

தனுசு
சனி பகவானின் பார்வை தனுசு ராசியில் பத்தாம் பார்வையாக கிடைக்கும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்கால திட்டங்கள் இவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம்.
உழைப்பிற்கான பலன்கள் இதுவரை தாமதமாக கிடைத்தாலும், இனி படிப்படியாக முன்னேற்றம் அடையலாம். தொழிலில் உள்ள தடைகள் நீங்குவதுடன், புதிய திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்பும் உருவாகும்.
வருமானம் அதிகரிக்கும் முயற்சியில் முன்னேற்றம் கிடைப்பதுடன், செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
வேலையில் புதிய பொறுப்பு மற்றும் நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை அனுபவத்தின் அடிப்படையில் எடுப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |