30 ஆண்டுகளுக்கு பிறகு வக்கிர நிலை அடையும் சனி பகவான்.., கோடியில் புரளப்போகும் 3 ராசிகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் வக்கிர நிலை அடைவதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
நவ கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகர்வதால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது. அதேபோல, சுழற்சியை முடித்துக் கொள்ள 30 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் சனி பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்யவுள்ளார். அதாவது 30 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகள் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகிறது.
கடக ராசி
கடக ராசியில் ஒன்பதாவது இடத்தில் சனி பகவான் வக்கிர நிலை அடைய இருப்பதால் உங்களின் கோடீஸ்வர யோகம் பிரகாசிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல் குறையும். திருமண காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைய இருப்பதால் பேச்சுத்திறமை அதிகரிக்கும். வேலைகள் வெற்றிகரமாக முடிந்து ஆடம்பர வசதிகள் அமையும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். நீண்ட காலமாக சிக்கி இருந்த பணம் உங்களது கைக்கு வந்து சேரும்.
மிதுன ராசி
மிதுன ராசியில் பத்தாவது பெட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைய இருப்பதால் வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல் தீரும். வேலை செய்கின்ற இடத்தில் சம்பளம் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |