ஏஞ்சலோ மேத்யூஸுக்கு பின் 'Timed Out'! வரலாற்றில் மோசமான சாதனை செய்த பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் Timed Out முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி கிண்ண கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. புனித ரமலான் மாதத்தில் உண்ணாவிரதம் இருக்கும் வீரர்களுக்கு இடமளிக்கும் வகையில், இரவு 7.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை முழுவதும் விளக்குகளின் கீழ் விளையாடப்பட்ட போட்டியின் அட்டவணை இந்த நிகழ்வை இன்னும் தனித்துவமாக்கியது.
இந்தப் போட்டியில் விக்கெட் விழுந்த பிறகு, சவுத் ஷகீல் ஒதுக்கப்பட்ட 3 நிமிடங்களுக்குள் மைதானத்திற்கு வர தவறினார். இதனால் அவருக்கு 'Timed Out' முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், இந்த வகையில் ஆட்டமிழந்த முதல் வீரர் எனும் மோசமான பெருமையை அவர் பெற்றார்.
ஆரம்பத்தில் போட்டியின்போது அவர் தூங்கிவிட்டதாக ஊகங்கள் தெரிவித்தன. ஆனால், அவர் எதிர்பாராத துடுப்பாட்ட சரிவைத் தொடர்ந்த மைதானத்திற்கு வர அவர் தயாராக அப்போது இல்லை என்பதை ESPN Cricinfoயின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
சவுத் ஷகீல் (Saud Shakeel) முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இம்முறையில் ஆட்டமிழந்த 7வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
2023 ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில், இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்ச்சைக்குரிய முறையில் 'Timed Out' செய்யப்பட்டது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |