சதம் விளாசி அணியை காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்: நங்கூர ஆட்டம் (வீடியோ)
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் சதமடித்தார்.
விக்கெட்டுகள் சரிவு
ராவல்பிண்டியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இங்கிலாந்து தமது முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் 89 ஓட்டங்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாஃபிக் 14 ஓட்டங்களிலும், சைம் அயூப் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
Truly a masterclass in grit and class ✨@saudshak leads Pakistan's batting with an epic ton ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/fOoqf8FtWQ
— Pakistan Cricket (@TheRealPCB) October 25, 2024
4வது டெஸ்ட் சதம்
அடுத்து வந்த கம்ரான் குலாம் 3 ஓட்டங்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக சோயிப் பஷீர், ரெஹான் அகமது இருவரும் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். எனினும், சவுத் ஷகீல் (Saud Shakeel) நங்கூரம் போல் நின்று ஆடினார்.
பவுண்டரிகள் விளாசுவதை விட ஓடியே ரன்களை எடுத்த அவர், தனது 4வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். தற்போது வரை பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
? INCREDIBLE INNINGS ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 25, 2024
4️⃣th Test ? for @saudshak ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/Eyedy5I8p1
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |