சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்! நங்கூரமாக நின்று முதல் சதம் விளாசிய வீரர்
கராச்சியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் முதல் சர்வதேச சதம் விளாசினார்.
பாகிஸ்தான் வீரர் ஷகீல்
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ஓட்டங்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
அப்துல்லா ஷாஃபிக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷான் மசூட் 20 ஓட்டங்களும், பாபர் அசாம் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய இமாம் உல் ஹக் 83 ஓட்டங்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் சர்பாரஸ் அகமது 78 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
@AFP
நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகீல், சர்வதேச டெஸ்டில் தனது சதத்தை பதிவு செய்தார். பின்னர் களமிறங்கிய அஹ்மா சல்மான் 41 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் ஹசன் அலி (4), நசீம் ஷா (4), ஹம்சா (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர்.
@AFP
Maiden Test ton for Saud Shakeel ?#WTC23 | #PAKvNZ | ? https://t.co/5TMMWQ0jQl pic.twitter.com/dQFH7cil0c
— ICC (@ICC) January 4, 2023
எனினும் நங்கூரமாய் நின்று ஷகீல் 124 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 407 ஓட்டங்கள் குவித்துள்ளது.