25 அறைகள் கொண்ட குடியிருப்பு, 8 சொகுசு கார்கள்: நெய்மருக்கு காத்திருக்கும் வசதிகள்
கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்கவிருக்கும் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு சவுதி அரேபியாவில் சொகுசு வாழ்க்கை காத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஆடம்பர வாழ்க்கை உறுதி
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கினார் நெய்மர். சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியில் இணைந்துள்ள நெய்மருக்கு ஆடம்பர வாழ்க்கையை உறுதி செய்துள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
@getty
நெய்மர் கோரிக்கை வைத்த தொகையை அல் ஹிலால் நிர்வாகம் அளித்துள்ளது. அதாவது 2 ஆண்டுகளுக்கு 175 மில்லியன் டொலர் தொகை. அத்துடன் அவர் தங்குவதற்கு 25 அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றும், சவுதி அரேபியாவில் பயன்படுத்தும் வகையில் 8 சொகுசு கார்களும் அல் ஹிலால் அணி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது குடும்பம், நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றாக தங்க வேண்டும் என நெய்மர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், 5 முழு நேர ஊழியர்களையும் நெய்மர் கேட்டு பெற்றுள்ளார்.
@reuters
மட்டுமின்றி தமது தனிப்பட்ட சமையற்கலைஞருக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்றும் கோரியுள்ளார். அத்துடன் வாகன சாரதிகள், தனிப்பட்ட விமான சேவையும் ஏற்பாடு செய்து தர நெய்மர் கோரியுள்ளார். இவை அனைத்தும் அல் ஹிலால் நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |