IPL மீது பார்வையை திருப்பியுள்ள சவுதி அரேபியா! 5 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டம்..
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் மீது சவுதி அரேபியா பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளையாட்டு 2008 தொடங்கப்பட்ட லீக் 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது உலகின் பணக்கார லீக்களில் ஒன்றாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐபிஎல் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. பிசிசிஐ ஸ்பான்சர் ஷிப்கள், மீடியா உரிமைகள் போன்றவற்றின் மூலம் வருமானம் பெறுகிறது.
கிரிக்கெட் விளையாடும் அனைவரும் ஐபிஎல்லில் ஒருமுறை விளையாடினால் போதும் என்று நினைப்பது மிகையாகாது. அதற்குக் காரணம், ஐபிஎல்-ல் ஒருமுறை பலத்தை வெளிப்படுத்தினால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம்.
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் மீது சவுதி அரேபியா அதன் பார்வையை திருப்பியுள்ளது. பங்குகளை வாங்க பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
கால்பந்து மற்றும் கோல்ஃப் ஆகியவற்றுடன், பல லீக்குகளில் பங்குகளை வாங்கிய சவுதி அரேபியா, சமீபத்தில் கிரிக்கெட்டிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள், இந்திய அரசு அதிகாரிகளுடன் இது குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளனர்.
அறிக்கையின்படி, ஐபிஎல்லை சுமார் 30 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து பேசப்படுகிறது. செப்டம்பரில் இளவரசரின் இந்திய விஜயத்தின் போது இந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படுத்தப்பட்டன. ஐபிஎல் லீக்கில் 5 பில்லியன் டொலர் முதலீடு செய்து, பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும் விவாதிக்கப்பட்டு, பிசிசிஐயின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை 6.2 பில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது தெரிந்ததே. அதாவது ஒரு போட்டிக்கு 15.1 மில்லியன் டொலர்கள். இது இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை விட அதிகமாக உள்ளது ஆனால் அமெரிக்க தேசிய கால்பந்து லீக்கை விட சற்று குறைவாக உள்ளது. அதனால்தான் இப்போது சவுதியின் கண் ஐபிஎல் மீது விழுந்துள்ளது போலிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Saudi Arabia, Indian Premier League, IPL, world's richest cricket league, Saudi Arabia to invesr on IPL, BCCI, Board of Control for Cricket in India, 30 Billion US Dollars Investemt