ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு? மறுப்பு தெரிவித்த சவுதி அணி மேலாளர்
சவுதி அரேபிய அணி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு வழங்கப்படும் என்று வெளியான செய்திக்கு அணியின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சாம்பியனை வீழ்த்திய சவுதி
முன்னாள் சாம்பியன் அணியான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்த சாதனை வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி மன்னர் ஒருநாள் அரசு விடுமுறை அளித்தார். அதனைத் தொடர்ந்து சவுதி அரேபிய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என மன்னர் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.
@REUTERS/Hannah Mckay
சொகுசு கார் மறுப்பு
இந்த நிலையில், சவுதி அரேபிய அணியின் மேலாளர் ஹெர்வ் ரெனார்ட் சொகுசு கார் பரிசு குறித்த செய்தியை மறுத்துள்ளார். இதுதொடர்பாக போலந்து ஆட்டத்திற்கு முன்பாக அவர் கூறுகையில்,
'இதில் உண்மை எதுவும் இல்லை. எங்களிடம் மிகவும் தீவிரமான கூட்டமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகம் உள்ளது. இந்த நேரத்தில் எதையாவது பெறுவதற்கான நேரம் இதுவல்ல. நாங்கள் ஒரு ஆட்டத்தை மட்டுமே கொண்டிருந்தோம். இன்னும் இரண்டு மிக முக்கியமான ஆட்டங்கள் உள்ளன. மேலும் சிலவற்றை எதிர்பார்க்கிறோம்.
இந்தக் குழு நிலையின் முடிவில் உள்ள ஒரே நல்ல விடயம், முதலிடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிப்பது தான். அனுபவத்தின் அடிப்படையில் இந்த குழுவில் நாங்கள் இன்னும் குறைந்த தரவரிசையில் உள்ள அணி.
இந்த நேரத்தில் எதுவும் மாறாது. இந்த உலகக்கோப்பையில் பிடித்தவைகளில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்கள் பணிவைக் கடைபிடிக்கிறோம். எங்கள் பணியை தவறவிட்டால் நாளை நன்றாக விளையாட மாட்டோம்' என தெரிவித்துள்ளார்.