ரொனால்டோ முதல் நெய்மர் வரை... சவுதி கால்பந்து அணிகளுக்கு படையெடுக்கும் உச்ச நட்சத்திரங்கள்
சவுதி அரேபிய கால்பந்து அணி ஒன்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்த பிறகு தற்போது ஐரோப்பாவில் இருந்து உச்ச நட்சத்திரங்கள் பலர் வரிசையாக அங்குள்ள கால்பந்து அணிகளில் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
நெய்மர் PSG அணியில் இருந்து விலகி
போர்த்துகல் கால்பந்து உச்ச நட்சத்திரம் ரொனால்டோ, பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கரீம் பென்சிமா வரிசையில் பலர் சவுதி அணிகளில் களமிறங்க உள்ளனர். பிரேசிலின் சூப்பர் ஸ்டார் நெய்மர் PSG அணியில் இருந்து விலகி அல் ஹிலால் அணியில் இணைய இருக்கிறார்.
N'Golo Kante ஆண்டுக்கு 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் Al-Ittihad அணியில் இணைந்துள்ளார். Roberto Firmino சவுதியின் Al Ahli அணிக்காக களமிறங்கியுள்ளார்.
அல்ஜீரிய நட்சத்திரம் Riyadh Mahrez 39 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் சவுதியின் Al Ahli அணியில் இணைந்துள்ளார். Sadio Mane அல் நஸ்ஸர் அணிக்காக 30 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
போர்த்துகல் நட்சத்திரம் Ruben Neves அல் ஹிலால் அணிக்காக 60 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செனகல் நட்சத்திரம் Kalidou Koulibaly அல் ஹிலால் அணிக்காக 21.6 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்லார்.
பிரேசில் நட்சத்திரம் Fabinho
செர்பிய கால்பந்து நட்சத்திரம் Sergej Milinkovic Savic அல் ஹிலால் அணிக்காக 44 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நட்சத்திரம் Fabinho அல்-இத்திஹாத் அணிக்காக 51 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் அணியின் இன்னொரு நட்சத்துர வீரர் Malcom அல் ஹிலால் அணிக்காக 66 மில்லியன் டொலர் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |