நடுவானில் ட்ரோனை தாக்கி அழித்த சவுதி போர் விமானம்! கமெராவில் சிக்கிய காட்சி
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதும் சவுதி மீதான ஹவுத்தி போராளிகளின் வான்வழி தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலைநகர் ரியாத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதன் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக சவுதி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்நிலையில், மலைப்பகுதியில் ஹவுத்தியால் ஏவப்பட்ட ட்ரோனை சவுதியின் F-15 போர் விமானம் தாக்கி அழித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வீடியோவில், வானில் ட்ரோன் பறந்துக்கொண்டிருக்கும் போது திடீரென ஏவுகணை தாக்கி வெடித்துச் சிதறுகிறது.
பின்னர், சவுதி F-15 போர் விமானம் ட்ரோன் இருந்த வான்வெளியில் பறப்பதைக் காணலாம்.
GOD BLESS THE #SAUDI?? EAGELS? pic.twitter.com/huvws1A4j7
— محمد بن خالد (@MbKS15) March 30, 2021
சவுதி மீதான ஹவுத்தி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் வழக்கமாகியுள்ளது, ஆனால் அவை அரிதாகவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.