தலைநகர் மீது குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... வெடித்து சிதறிய முக்கிய பணிமனை! வெளியான திகிலூட்டும் வீடியோ
ஏமன் தலைநகர் சனா மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை சரமாரி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.
சனாவில் தாக்குதல் நடத்தப்பட்டதை சவுதி தலைமையிலான கூட்டுப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏமனில் ஹவுத்தி போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை சனா நகரில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏவுகணைகள், டிரோன்கள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடி மருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் நாட்களில் ஹவுத்தி சவுதி மீது நடத்தவிருக்கும் தாக்குதலை தடுப்பதற்கும், தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்களை அழிப்பதற்கும் மற்றும் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை குறிப்பிட்டுள்ளது.
video of the destruction of Houthi ammunition depot/warehouse pic.twitter.com/IlckJP4jmu
— Aleem Khan - ?? (@Al33mK) March 21, 2021
சவுதி எண்ணெய் நிறுவனங்ள், விமான நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் நடத்தும் சமீப நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.