பணத்தைச் சேமிக்க விரும்புவதால் : மேசைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என சுந்தர் பிச்சை தெரிவிப்பு
கூகுள் நிறுவனம் தனது பணியாளர்கள் சிலருடன் மேசையை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது.
கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு கூட்டத்தில் இந்த நடவடிக்கை பணத்தை சேமிக்க உதவும் என்று ஒரு அறிக்கையின்படி தெரிவித்தார்.
இந்தியா உட்பட பல பிராந்தியங்களில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர் கூகிள் செலவைக் குறைக்க எடுத்த மற்றொரு நடவடிக்கை இதுவாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
சுந்தர்பிச்சையின் கருத்து
ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, "என்னை பொருத்தவரை அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றனர். அதே சமயம் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பர், எப்போதும் மேஜைகள் காலியாகவே உள்ளது.
இதை பார்க்க பேய் நகரம் போன்று காட்சியளிக்கும். இது நல்ல அனுபவம் இல்லை," என்று தெரிவித்து இருக்கிறார்.
மேசையை பகிர்வதோடு மட்டுமின்றி ஊழியர்கள் செலவீனங்களில் கவனமாக இருக்கவும். தேவையின்றி பொருட்களை செலவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.