காளையிடமிருந்து இளைஞரைக் காப்பாற்ற துணிச்சலாக பாய்ந்த இந்திய வம்சாவளி MLA... பரபரப்பாக பேசப்படும் ஒரு வீடியோ
வீரத்தமிழ்ப்பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டிய கதையை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்...
அதேபோன்ற ஒரு துணிச்சலைக் காட்டியிருக்கிறார் இந்திய வம்சாவளியினரான கனடா MLA ஒருவர்!
ஆம், ஆல்பர்ட்டா MLAவான லீலா அஹீர், முரட்டுக்காளைகளுக்கு முன் ஓடும் ஒரு வீர விளையாட்டைக் காணச் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவரை ஒரு முரட்டுக்காளை முட்டித் தள்ளியிருக்கிறது. தொடர்ந்து அவரை அந்தக் காளைப் பந்தாட முயல, சற்றும் யோசிக்காமல் மைதானத்துக்குள் குதித்துள்ளார் லீலா.
அவர் அந்தக் காளையின் கொம்பைப் பிடித்து அதைத் தள்ள, அது அந்த இளைஞரை விட்டு விலகும் நேரத்தில் அந்தக் காளையைக் கையால் பிடித்துத் தள்ளி விட்டு, அந்த இளைஞரை அவர் மீட்டுக் கொண்டு வருவதை வெளியாகியுள்ள விடியோ ஒன்றில் காணலாம்.
சற்றும் பயப்படாமல், அவ்வளவு பெரிய அந்தக் காளையைப் பிடித்துத் தள்ளி அவர் அந்த இளைஞரைக் காப்பாற்றும் காட்சியைப் பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது.
லீலா முதலானவர்கள் அந்த இளைஞரைக் காப்பாற்றும் காட்சியைக் கண்ட மக்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் அந்த வீடியோவில் காணலாம்.
இது குறித்து லீலாவிடம் கேட்டால், அந்த நேரத்தில் என் தாய்மை உணர்வுதான் வெளிப்பட்டது என்று நான் நினைக்கிறேன் என்று கூறும் லீலாவுக்கு வயது 51. நான் எப்படியாவது அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில், அந்தக் காளையின் முன் குதித்து, அதன் கவனத்தைத் திசை திருப்ப முயன்றேன், அவ்வளவுதான் என்கிறார் லீலா.
Image - cochranenow.com
ஆனால், லீலா காளையிடமிருந்து அந்த இளைஞரைக் காப்பாற்றும் வீடியோ பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீலா, United Conservative Party of Alberta கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் எங்களுக்கு வேண்டும் என சமூக ஊடகங்களில் மக்கள் லீலாவை மனதார பாராட்டி வருகிறார்கள்.
I don’t know if this is for real, but if that’s really @LeelaAheer jumping in to help save someone from being gored by a bull … then that’s pretty impressive. Hope everyone is okay. https://t.co/btv46OGgeT
— Gil McGowan (@gilmcgowan) August 1, 2022