இந்த தகுதி இருந்தால் போதும் - மாதம் ரூ.35,000 வரை அரசினால் பெறலாம்!
உங்களது வீட்டில் ஒரே ஒரு பெண் பிள்ளை மட்டும் இருந்தால் போதும் நீங்கள் திட்டத்தில் விண்ணப்பித்துக்கொள்ள முடியும். மத்திய அரசின் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஃபெல்லோஷிப் என்ற திட்டமே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அந்த பெண் 5 ஆண்டகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதை எப்படி விண்ணப்பிக்கலாம் எனவும் கிடைக்கும் நன்மைகள் குறித்துய் விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே பெல்லோஷிப் 2024
உயர்கல்வி இயக்குனரகம் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் (UGC) இணைந்து சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப்பை அறிமுகப்படுத்துகிறது.
சகோதர சகோதரிகள் இல்லாத குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த கூட்டுறவுத் திட்டம் உதவி வழங்குகிறது. மேலும், குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால், அவர்கள் இரட்டிப்பாக பலனை பெறுவார்கள்.
திட்டத்தின் பயன்கள்
2 ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
சீனியர் ஆராய்ச்சி ஃபெலோக்களுக்கு தலா ரூ.35,000 எஞ்சிய காலத்திற்கு வழங்குகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தகுதி
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் பிஎச்.டி யை முழு நேரமாக பயில வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்கள் வயது 40 இற்கு குறைவாக இருக்க வேண்டும்.
SC/ST/OBC, PWD 45 வயதுக்குள் இருக்கலாம். NACC சான்றிதழ் பெற்ற மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள் அல்லது NACC சான்றளிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் Ph.D செய்யப்பட வேண்டும்.
அரசு நிதியுதவி மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் Ph.D செய்தும் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.ugc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திளத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியும். அதில் பெற்றோரின் பெயர், பாலினம், மொபைல் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி, முகவரி, ஆதார் எண் போன்ற அடிப்படை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் இட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |