வைரத்தை வெட்ட தொழிற்சாலை.., மகனை பேக்கரி வேலைக்கு அனுப்பி ஊழியர்களுக்கு நகைகள், கார்களை வாரி வழங்கும் வள்ளல்
இந்தியாவின் வைர வர்த்தக மையமாக திகழும் சூரத்தில் பணக்காரராக வலம் வரும் சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா தனது மகனை பேக்கரி வேலைக்கு அனுப்பி எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
யார் இவர்?
1962 -ம் ஆண்டு, ஏப்ரல் 12 -ம் திகதி குஜராத்தின் துதாலாவில், அம்ரேலி மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா. இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயதில் கல்வியை நிறுத்தினார்.
தற்போது, திறமையினால் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்ட் என்ற நிறுவனத்தை நிறுவி வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் முதன்மையானவராக உள்ளார்.
வைரத்தை வெட்ட தொழிற்சாலை
இவர், வைரத்தை வெட்டுவதற்கும், அதை பாலிஷ் செய்வதற்கும் சூரத்தில் தனி தொழிற்சாலையை நிறுவியுள்ளார். மேலும், மும்பையில் ஏற்றுமதி அலுவலகத்தையும் அமைத்துள்ளார்.
கடந்த 1992 -ம் ஆண்டு வைர உற்பத்தியில் கடும் போட்டிக்கு மத்தியில் தனது சகோதரர்களுடன் இணைந்து ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை அமைத்தார். பின்பு, 2005 -ம் ஆண்டு ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸின் கீழ் "கிஸ்னா" என்ற நகை பிராண்டை அறிமுகம் செய்தனர். தற்போது, கிஸ்னா பிராண்ட் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் 6,250க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளது. இவருடைய நிறுவனத்தில் மொத்தம் 6500 பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
வாரி வழங்கும் வள்ளலான சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா, தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக நகைகள், கார்கள், பிளாட்கள், நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
மகன் 200 ரூபாய்க்கு வேலை
இத்தனை ஆடம்பரங்களை வைத்திருக்கும் சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா, எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தனிப்பட்ட பண்புகளை வைத்திருக்கும் தன்ஜியின் துணிச்சலான முடிவுகள், அவரது மகனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அதாவது, தனது மகன் திராவியாவை குடும்ப பெயரை பயன்படுத்தாமல் தனித்து தொழிலை தொடங்க வேண்டுமென்று கூறியுள்ளார். அதன்படி, செருப்பு கடை, மெக்டொனால்ட்ஸ், கால் சென்டர் உள்ளிட்ட நிறுவனங்களில் திராவியா பணிபுரிந்துள்ளார்.
பேக்கரியில் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு போயுள்ளார். மேலும், சாவ்ஜி தன்ஜியின் நிகர மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |