ஒவ்வொரு சிறுமி, சிறுவர்களும் பேட் மற்றும் பந்தை கையில் எடுக்க வேண்டும்! இதுதான் எங்கள் இலக்கு..உருக்கத்துடன் கூறிய கேப்டன்
எங்கள் நாடே எங்களால் உத்வேகம் பெற வேண்டும் என்பதே இலக்கு தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் கேப்டன் சுனே லூஸ் தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் சுனே லூஸ் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
@AARON GILLIONS/WWW.PHOTOSPORT.NZ/BACKPAGEPIX
தென் ஆப்பிரிக்க கேப்டன் லூஸ்
அவர் இதுதொடர்பாக கூறுகையில், 'இந்த நாட்டில் இந்த உலகக்கோப்பையில் ஏற்கனவே நிறைய நல்ல விடயங்கள் வெளிவந்துள்ளன என்று நான் நினைக்கிறேன்.
மேலும், தேசத்தை ஊக்குவிப்பதும், தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் கிரிக்கெட்டை முக்கியத்துவம் பெற செய்வதும், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் தங்கள் கையில் பேட், பந்தை எடுக்க செய்வதும் எங்களின் குறிக்கோள் என்று நினைக்கிறேன்.
@t20worldcup.com
பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விளையாட்டு என்பது உயர்த்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் நிச்சயமாக வேலையைச் செய்கிறோம்.
நீங்கள் இப்போது பெண்கள் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் யாராக இருந்தாலும் உங்களிடம் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
@ICC (Twitter)