Spider Woman ஆக மாறி 4 கேட்ச்கள்! இங்கிலாந்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டி முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி
கேப்டவுனில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் குவித்தது.
டஸ்மின் பிரிட்ஸ் 68 ஓட்டங்களும், ஒல்வார்டட் 53 ஓட்டங்களும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்ஸ்டோன் 3 விக்கெட்டுகளும், லாரென் பெல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களே எடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Player of the Match with an outstanding catch ?♀️
— ICC (@ICC) February 24, 2023
This Tazmin Brits moment could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!
Visit https://t.co/8TpUHbQikC to own iconic moments from the @T20WorldCup. pic.twitter.com/iiDWhBa7av
அதிகபட்சமாக நட் சிவெர் 40 ஓட்டங்களும், டேனியில்லே வைட் 34 ஓட்டங்களும் விளாசினர். அயபோங்க காக 4 விக்கெட்டுகளும், ஷாப்நிம் இஸ்மையில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Spider Woman டஸ்மின் பிரிட்ஸ்
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பிரிட்ஸ் அசத்தலாக 4 கேட்சுகளை பிடித்தார். குறிப்பாக அலைஸ் கேப்ஸி அடித்த ஷாட்டை ஸ்பைடர் யுமன் போல பறந்து மிரட்டலாக கேட்ச் பிடித்தார்.
@t20worldcup
68 ஓட்டங்கள் மற்றும் 4 கேட்ச் பிடித்த டஸ்மின் பிரிட்ஸ் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார். பிப்ரவரி 26ஆம் திகதி நடக்கும் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
@t20worldcup
@t20worldcup