SBI 444 நாட்கள் FD vs Indian Bank 444 நாட்கள் FD.., எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?
எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கியின் 444 நாட்கள் FD திட்டத்தின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் FD-ல் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
அந்தவகையில் பொது துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா (BoB), இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) போன்ற வங்கிகள் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு நிலையான வைப்பு (FD) திட்டங்களை வழங்குகின்றன.
SBI Amrit Vrishti Scheme
எஸ்பிஐயின் இந்த special 444 நாட்கள் FD scheme ஆனது மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தையும், பொது குடிமக்களுக்கு 6.60 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
ரூ.2 லட்சம் முதலீட்டில் பொது குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.2,16,577
ரூ.2 லட்சம் முதலீட்டில் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு தொகை- ரூ.2,17,876
ரூ.5 லட்சம் முதலீட்டில் பொது குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.5,41,443
ரூ.5 லட்சம் முதலீட்டில் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.5,44,690
Indian Bank 444 நாட்கள் FD scheme
இந்தியன் வங்கியானது 444 நாட்கள் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீத வட்டி விகிதத்தையும் பொது குடிமக்களுக்கு 6.70 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
ரூ.2 லட்சம் முதலீட்டில் பொது குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.2,16,837
ரூ.2 லட்சம் முதலீட்டில் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு தொகை- ரூ.2,18,137
ரூ.5 லட்சம் முதலீட்டில் பொது குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.5,42,091
ரூ.5 லட்சம் முதலீட்டில் மூத்த குடிமக்களுக்கு முதிர்வு தொகை - ரூ.5,45,342
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |