SBI ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் - எந்த சேவைகள் பாதிக்கும்?
SBI ஊழியர்கள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
SBI ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நாட்டின் ஒட்டுமொத்த வங்கி நடவடிக்கைகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பங்கைக் கொண்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI). சுமார் 54 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊதியம், தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தம், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக SBI ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மே 25 மற்றும் 26 (திங்கள்மற்றும் செவ்வாய் கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனேவே மே 23(சனிக்கிழமை) மற்றும் 24(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாக உள்ளது. மேலும், 27 ஆம் திகதி பக்ரீத் பண்டிகை காரணமாக சில மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வங்கிசேவைகளில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
நேரடியாக வங்கி சேவைகள், காசோலை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
— State Bank of India (@TheOfficialSBI) May 22, 2026
இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டும் எனவும், மேலும் பணப்பரிவர்தனைக்கு UPI, மொபைல் பேங்கிங், யோனா எஸ்பிஐ செயலி ஆகியவற்றை பயன்படுத்துமாறு SBI வங்கி அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |