SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம்
எஸ்பிஐ ஜன்நிவேஷ் எஸ்ஐபி திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
SBI JanNivesh SIP
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) இணைந்து "Jan Nivesh SIP" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் எஸ்ஐபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
இந்த திட்டத்தில் தினசரி, வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
ஜன் நிவேஷ் SIP மூலம் செய்யப்படும் முதலீடுகள் SBI பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டிற்குச் செல்லும். இந்த ஃபண்ட் புதிய முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
எதில் முதலீடு?
நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், SBI Yono செயலி மூலம் முதலீடு செய்யலாம். மேலும், Paytm, Zerodha மற்றும் Groww போன்ற டிஜிட்டல் நிதி தொழில்நுட்ப தளங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம்.
ரூ.250 முதலீடு
இப்போது நாம் 12 சதவீத வருடாந்திர வருமானத்தையும், ரூ.250 மாதாந்திர முதலீட்டையும் வைத்து கணக்கிடலாம்.
இந்த திட்டத்தில் மாதம்தோறும் 250 ரூபாய் என 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை ரூ.30,000 ஆக இருக்கும்.
இதற்கு 12% வருமானம் கிடைத்தால் ரூ.26,009 ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸ் தொகை ரூ.56,009 ஆக இருக்கும்.
இதுவே நாம் மாதம்தோறும் 250 ரூபாய் என 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை ரூ.60,000 ஆக இருக்கும்.
இதற்கு 12% வருமானம் கிடைத்தால் ரூ.1,69,964 ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸ் தொகை ரூ.2,29,964 ஆக இருக்கும்.
மேலும், மாதம்தோறும் 250 ரூபாய் என 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகை ரூ.90,000 ஆக இருக்கும்.
இதற்கு 12% வருமானம் கிடைத்தால் ரூ.6,80,243 ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸ் தொகை ரூ.7,70,243 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |