வெறும் 15 நிமிடங்களில் SBI வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கலாம்! விவரங்கள் உள்ளே
எஸ்பிஐ வங்கி (SBI) தொடங்கிய கடன் வழங்கும் திட்டத்தை பற்றிய தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கடன் திட்டம்
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் (MSME) வெறும் 15 நிமிடங்களிலேயே கடன் உதவியை பெறுவதற்கு எஸ்பிஐ வங்கி (SBI) கடன் வழங்கும் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.
பொதுவாகவே ஒரு தொழிலை தொடங்கியவருக்கும், ஏற்கனவே தொழிலை நடத்தி வருபவர்களுக்கும் பணத்தேவை தேவைப்படும். அதற்கு அவர்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவார்கள்.
இந்த மாதிரியான சூழலில் இருப்பவர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் வெறும் 15 நிமிடங்களிலேயே கடன் உதவியை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயரானது எம்.எஸ்.எம்.இ. சஹாஜ் (MSME Sahaj) ஆகும். இந்த திட்டம் இணைய வழியில் செயல்படுத்தப்படுகிறது.
இணைய அடிப்படையிலான இந்த டிஜிட்டல் சேவை வாயிலாக வங்கி வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது, தங்களுடைய ஜி.எஸ்.டி விற்பனை ரசீதுகளுக்கு எதிராக 1 லட்சம் ரூபாய் வரையிலான கடனை வெறும் 15 நிமிடங்களிலேயே அனுமதிக்கிறது.
கடன் விண்ணப்பித்தல் முதல் கடன் வழங்குதல் வரையிலான அனைத்தும் தானியங்கி முறையிலேயே இருக்கும்.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் ஜிஎஸ்டி பதிவு செய்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களும் தங்களுடைய மூலதன தேவைகளை தொடர்வதற்கான குறுகிய கால கடனை வழங்குவதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |