வந்தாச்சு பண்டிகை காலம்! வீட்டுக் கடனுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது SBI
பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வீட்டுக் கடனுக்கு சிறப்புத் தள்ளுபடியை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்குகிறது.
CIBIL ஸ்கோர்
வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான தனித்துவமான திட்டத்தின் கீழ், முன்னணியில் கடன் வழங்கும் வங்கியாக இருப்பது எஸ்பிஐ ஆகும். இந்த வங்கியானது 5 அடிப்படை புள்ளிகள் (bps) வரை சலுகைகள் வழங்குகிறது.
இந்த வீட்டுக் கடன் சலுகைகள் டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்கப்படுகிறது. மேலும்,முக்கியமான சலுகைகள் சிபில் ஸ்கோர் அடைப்படையில் வழங்கப்படும்.
கடன் வழங்குபவர்கள் CIBIL ஸ்கோர் அடிப்படையாக வைத்து தான் கடன் வழங்குவர். அதாவது, அதிக மதிப்பெண் இருந்தால் கடன் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
ஆனால், கிரெடிட் கார்டு அனுமதிக்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை சிபில் ஸ்கோர் ஒருபோதும் முடிவு செய்யாது.
உங்கள் சிஐஆரின் Accounts மற்றும் Enquiries பிரிவில் கிரெடிட் அளவின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட CIBIL ஸ்கோர் 300-900 வரை இருக்கும்.
உங்களது CIBIL ஸ்கோர் 700 க்கு மேல் இருந்தால் நல்லதாகும். அதுவே, 900க்கு மேல் இருந்தால் உங்களது கடன் மதிப்பீடு சிறப்பாக இருக்கும்.
SBI தள்ளுபடி
* 101-150 CIBIL ஸ்கோர் என்ற வரம்பின் கீழ் வருபவர்களுக்கு, SBI வங்கி எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை. இவர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.45 % ஆகும்.
* 151-200 CIBIL ஸ்கோர் உள்ளவர்களுக்கு சலுகைக் காலத்தில் 65 bps தள்ளுபடியை எஸ்பிஐ வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு கடன் வட்டி விகிதம் 8.7 % ஆகும்.
* 550-599 CIBIL ஸ்கோர் என்ற வரம்பின் கீழ் வருபவர்களுக்கு, SBI வங்கி எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை. இவர்களின் பயனுள்ள விகிதம் 9.45 % ஆகும்.
* 700-749 CIBIL ஸ்கோர் என்ற வரம்பின் கீழ் வருபவர்களுக்கு சலுகைக் காலத்தில் 65 bps தள்ளுபடியை எஸ்பிஐ வழங்குகிறது. இவர்களின் பயனுள்ள விகிதம் 8.7 % ஆகும்.
* 750-800 CIBIL ஸ்கோர் அல்லது அதற்கு மேல் உள்ள CIBIL ஸ்கோர்களுக்கு, சலுகை காலத்தில் 55 bps சலுகையுடன் 8.60 சதவீத வீட்டுக் கடன் வட்டி வழங்கப்படும்.
இதனிடையே, 700 மற்றும் அதற்கு மேல் CIBIL மதிப்பெண் வைத்துள்ள ஒருவர், வீட்டுக் கடன் கையகப்படுத்துதல், மறுவிற்பனை மற்றும் ஆயத்த சொத்துக்கள் ஆகியவற்றின் போது bps தள்ளுபடி போன்ற கூடுதல் சலுகையும் பெறலாம்.
மேலும், பில்டர் டை-அப் திட்டங்களுக்கு, மேற்கூறிய கட்டணங்களில் கூடுதல் சலுகையாக 5 bps வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |