மாதம் ரூ.1 லட்சம் வரை ஓய்வூதியம் கிடைக்கும் அசத்தலான SBI Pension திட்டம்!
தனிநபர்கள் ஒருமுறை பணம் செலுத்தி, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் எஸ்பிஐ ஃலைப் ஸ்மார்ட் அனுட்டி ப்ளஸ் (SBI Life Smart Annuity Plus) திட்டம் மூலம் ஓய்வூதியத்தை பெறலாம். அதை பற்றிய தொகுப்பை தான் பார்க்க போகிறோம்.
SBI திட்டம்
ஸ்பிஐ ஃலைப் ஸ்மார்ட் அனுட்டி ப்ளஸ் (SBI Life Smart Annuity Plus) திட்டமானது, தனிநபர்கள் ஒருமுறை பணம் செலுத்துவதை அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாமல், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் ஓய்வூதியத்தை பெறுவதற்கான அனுமதியையும் வழங்குகிறது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் மாத வருமானம் பெறுவதற்கு நமக்கு செலவு ஏற்படும். 60 வயதை எட்டிய நபர் ஒருவர் இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் ரூ.1 லட்சம் அல்லது ரூ.50,000 பெற எவ்வளவு தொகையை செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ரூ.1 லட்சம் பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?
எஸ்பிஐ லைஃப் ((SBI Life) இணையதளம், அதனுடைய இணையதளத்தில் ஒரு கால்குலேட்டரை நமக்கு வழங்குகிறது.
இந்த கால்குலேட்டரானது, தனிநபர்கள் விரும்பும் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரத்தை பெறுவதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை காண்பிக்கும்.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் 60 வயதை எட்டிய நபர் ஒருவர், மாதம் ரூ.1 லட்சத்தைப் பெற ரூ.1,88,32,392 செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |