Jobs: மாத சம்பளம் ரூ.63000... SBI வங்கியில் வேலைவாய்ப்பு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பாரத ஸ்டேட் வங்கி, SBI PO- 2000 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், காலிப்பணியிடங்களுக்கு இன்று(செப்7) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியுடையோர் SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.
- நிறுவனம்- பாரத ஸ்டேட் வங்கி(SBI)
- பணியின் பெயர்- Probationary Officers
- பணியிடங்கள்- 2000
- மாத சம்பளம்- ரூ.63000
- விண்ணப்பிக்கும் முறை- Online
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு
ஏப்ரல் 1, 2023 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
பொது/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும், SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி: செப்டம்பர் 7, 2023
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 27, 2023
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: செப்டம்பர் 27, 2023
- SBI PO ப்ரீலிம்ஸ் அட்மிட் கார்டு பதிவிறக்கம்: அக்டோபர் 2023 முதல் வாரத்தில்
- எஸ்பிஐ பிஓ முதல்நிலைத் தேர்வு 2023:நவம்பர் 2023 SBI PO 1 ஆம் கட்ட முடிவு தேதி: நவம்பர் / டிசம்பர் 2023
எப்படி விண்ணப்பிப்பது?
படி 1: SBI இன் அதிகாரப்பூர்வ sbi.co.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
படி 2: Careers என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 3: PO அல்லது கிளார்க் விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பைச் சரிபார்க்கவும்.
படி 4: நீங்களே பதிவு செய்து, Account ஐ Login செய்யவும்.
படி 5: விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 6: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |