மதிய உணவுக்கு மொத்தமாக சென்ற ஊழியர்கள்.., புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை எச்சரித்த SBI
SBI வங்கியில் அனைத்து ஊழியர்களும் மதிய உணவுக்கு சென்ற நிலையில் அதன் புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை SBI வங்கி எச்சரித்துள்ளது.
வாடிக்கையாளர்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், பாலி பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணியளவில் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து கேட்ட போது ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்றுள்ளதாக வாடிக்கையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், மதிய உணவு இடைவேளை என எதுவும் கிடையாது என்று தான் SBI வங்கி சொல்லியிருந்தது.
இந்நிலையில், ஊழியர்களும் மொத்தமாக மதிய உணவுக்கு சென்றுள்ளனர் என்றும், அந்த புகைப்படத்தை பகிர்ந்தும் வங்கியை டேக் செய்து வாடிக்கையாளர் பதிவிட்டிருந்தார்.
SBI பதில்
இதற்கு SBI தரப்பில் இருந்து, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கிளை வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோகிராஃபி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நீங்கள் பொறுப்புக் கூறலாம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து இவற்றை நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு, புகாரளித்த வாடிக்கையாளருக்கு தீர்வு சொல்லாமல் அவரை மிரட்டும் தொனியில் பதிவிட்டதை ஏற்க முடியாது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |