திருப்பரங்குன்ற தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்ன?
sc order to lighting in tiruparankundram dhoon: திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் பக்தர்கள் அனைவரும் நாளை தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலிலே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது, தூணில் கார்த்திகை மாதத்திற்குள் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் வேண்டும். அனைத்து பக்கதர்களும் தீபம் ஏற்றலாம்.
தர்காவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு தாண்டி அனைத்து பக்கங்களிலும் தீபம் ஏற்றலாம், தர்காவுக்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எந்த வகையிலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவின் செயல்பாட்டில் தடங்கல் இருக்கக்கூடாது திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்காவை வேறுபடுத்தும் விதமாக தர்காவைச் சுற்றி வேலி அமைக்கலாம்.
கோவில் நிர்வாக அறங்காவலர் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அறங்காவலர் குழுவை கலைத்ததோடு, முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை நியமித்தது.
மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி, அறநிலையத்துறை செயலாளர் உட்பட 13 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.