அமேசான் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு மோசடி: சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், அமேசான் நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டது போன்றதொரு மின்னஞ்சல் மூலம் ஒரு மோசடி நடந்து வருவது தெரியவந்துள்ளது.
பொலிசார் எச்சரிக்கை
அமேசான் நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டது போன்றதொரு மின்னஞ்சல் மூலம் ஒரு மோசடி நடந்து வருவதாக சுவிஸ் பெடரல் சைபர் கிரைம் பொலிசார் மக்களை எச்சரித்துள்ளார்கள்.
இந்த மோசடியில், அமேசான் நிறுவனம் அனுப்பியது போல் தோன்றும் ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறதாம். அதில் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறதாம்.
அமேசான் நிறுவனத்தின் இணையதளம் போலவே தோற்றமளிக்கும் ஒரு இணையதளம் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆக, தெரியாதவர்கள் தங்கள் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம், அவர்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் வேறு யாரோ பொருட்கள் வாங்குகிறார்களாம்.
எனவே, அமேசான் ஒரிஜினல் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள பொலிசார், மின்னஞ்சலில் அனுப்பப்படும் எந்த லிங்கையும் கிளிக் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
அப்படி ஏதாவது மின்னஞ்சல் வந்தால், உடனடியாக தங்களை அணுகுமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |