மூட்டைப்பூச்சி பிரச்சினையை பயன்படுத்தி பிரான்சில் ஒரு மோசடி
பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினை அதிகம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி, அந்நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த மூட்டைப்பூச்சி பிரச்சினையையும் பயன்படுத்தி, சிலர் ஒரு நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூட்டைப்பூச்சி பிரச்சினையை பயன்படுத்தி ஒரு மோசடி
பிரான்ஸ் நாட்டவர்கள் இரண்டுபேர், சமீபத்தில் பிரான்சில் முக்கியச் செய்தியான மூட்டைப்பூச்சி பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, முதியவர்கள் வசிக்கும் வீடுகளாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அவர்களை தொலைபேசியில் அழைத்து, அந்த பகுதியில் மூட்டைப்பூச்சி பிரச்சினை பெருகிவருவதாக எச்சரித்துள்ளனர்.
பின்னர், அவர்களுடைய வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேடத்தில் சென்று, சோதனை மேற்கொள்வதுபோல் நடித்து, ஏதோ ஒரு ஸ்பிரேயை தெளித்துவிட்டு, உடலில் தடவ ஒரு களிம்பையும் கொடுத்திருக்கின்றனர்.
REUTERS
உண்மையில், அந்த வீடுகளில் மூட்டைப்பூச்சி பிரச்சினையே இல்லை. ஆனால், மூட்டைப்பூச்சி பிரச்சினை இருப்பதாகக் கூறி அவர்களை ஏமாற்றி, 300 யூரோக்கள் முதல் 2,100 யூரோக்கள் வரை வசூலித்துள்ளார்கள் அந்த இருவரும்.
இப்படி தாங்கள் ஏமாற்றப்பட்டதாக 48 பேரிடமிருந்து புகார் வரவே, அதிகாரிகள் அவர்களை கண்காணிக்கத் துவங்கியுள்ளனர்.
கடைசியாக, Strasbourg என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குச் சென்று அதே நபர்கள் கைவரிசையை காட்ட, வீட்டை விட்டு வெளியே வந்த இருவரையும் பொலிசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |