Cryptocurrency-ல் கடந்த மாதம் மட்டும் மில்லியன்களில் மோசடி! எச்சரிக்கை செய்தி
கடந்த மாதம் மட்டும் Cryptocurrency தொடர்பான Youtube Live மூலமாக மில்லியன் கணக்கில் (டொலர்களில்) மோசடி நடந்துள்ளதாக எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.
YouTube Live போன்ற தளங்களில் போலி Bitcoin, Ethereum, Dogecoin, Cardano, Ripple மற்றும் Shiba Inu கொடுப்பனவுகள் (Giveaway) பெருகுவதால், சமூக ஊடகங்களில் போலி Cryptocurrency கொடுப்பனவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Tenable எச்சரித்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும், செய்து, YouTube Live மூலமாக மோசடிகள் செய்து குறைந்தது 8.9 மில்லியன் டொலர்களுக்கு திருட்டு நடந்துள்ளதாக Tenable அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
"போலி கிரிப்டோகரன்சி பரிசுகளை விளம்பரப்படுத்த விளம்பரம் செய்பவர்கள் சமரசம் செய்யப்பட்ட YouTube கணக்குகளை (compromised YouTube accounts) பயன்படுத்துகின்றனர்" என்று Tenable கூறுகிறது.
இவ்வாறு மோசடி செய்பவர்கள், மக்கள் யூடியூப் சேனல்களை நம்புகிறார்கள் என்பதை தெரிந்துவைத்துள்ளனர். பல பெரிய நிறுவனங்களின் சிஇஓக்கள், கிரிப்டோ நாணயங்களின் நிறுவனர்களின் புகைப்படம் அல்லது விடியோக்கள் இடம்பெரும் வகையில் போலியான வீடியோக்களை தயாரித்து வெளியிடுகின்றனர்.
அதில், Giveaway கொடுப்பதாக உறுதியளித்து, ஏதேனும் போட்டிகளில் பங்கேற்குமாறு கூறி, கிரிப்டோ நாணயங்களை அனுப்ப சொல்கின்றனர்.
இவ்வாறு, எந்த கிரிப்டோ நாணயத்தையும் அனுப்பவேண்டாம், அப்படி அனுப்பினால் அது எப்போதும் உங்களுக்கு திரும்ப கிடைக்காது என Tenable எச்சரிக்கிறது.
இதுபோன்று சந்தேகிக்கும் வகையில், Giveaway Contest-களை விளம்பரப்படுத்தும் YouTube விடீயோக்களை கண்டால், பார்வையாளர்கள் வீடியோவின் கீழே உள்ள Flag ஐகானைக் கிளிக் செய்து, "spam or misleading" வகையைத் தேர்ந்தெடுத்து, கீழ்தோன்றும் மெனுவில் "scams or fraud" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் அத்தகைய வீடியோக்களை YouTube இல் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதால், இதுபோன்ற போலி Giveaway Contest-ல் சிக்கிக்கொள்ளும் பலரை காப்பாற்றலாம்.