அந்த நாட்டில் இருந்து மானுடத்தை அழிக்கும் புதிய பெருந்தொற்று: பீதியை கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸ் 2021 ஆம் ஆண்டு தொடர்பில் கணித்திருப்பதாக கூறப்படும் தகவல்கள் பீதியை கிளப்பியுள்ளன.
கடந்த சில நூற்றாண்டுகளாக உலக நாடுகளில் நடந்தேறிய முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது அப்படியே நிகழ்ந்துள்ளன.
பிரித்தானிய தலைநகர் லண்டனை மொத்தமாக சிதைத்த தீ விபத்து தொடங்கி ஹிட்லரின் வளர்ச்சி, இரண்டாம் உலகப்போர், அணுகுண்டு, பிரெஞ்சு புரட்சி உள்ளிட்ட அனைத்தும் அந்தந்த காலகட்டத்தில் நிறைவேறியுள்ளன.
மட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி கென்னடி படுகொலை, உலக வர்த்தக மையம் மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளிட்டவையும் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது 2021 தொடர்பில் அவர் கணித்துள்ளதாக கூறப்படும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் முக்கியமாக, மானுட இனத்திற்கே மிக மோசமான நிகழ்வு ஒன்று நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய உயிரியல் ஆயுதம் ஒன்றை உருவாக்குவார்கள் எனவும், அந்த கிருமியால் பாதிக்கப்படும் மக்கள் ஜாம்பிகளாக உருமாற்றம் அடைவார்கள் எனவும், இறுதியில் மானுட இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழியும் நிலை ஏற்படும் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
டுத்ததாக உலக நாடுகள் பல பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், சூரியனில் இருந்து மிகப்பெரிய புயல்கள் தாக்கும் அபாயமும் 2021-ல் இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
மட்டுமின்றி, மக்கள் கூட்டம் கூட்டமாக இனி புலம்பெயர்வார்கள் எனவும், எஞ்சிய இயற்கை வளங்களுக்காக மக்கள் அடித்துக் கொள்வார்கள் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் குறுங்கோள் ஒன்று இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், ஒரு பெரிய பூகம்பம் அமெரிக்காவைத் தாக்கும் என்றும் குறிப்பாக கலிபோர்னியா மொத்தமாக சிதையும் எனவும், அது நவம்பர் மாதத்தில் நடந்தேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.