இந்த திட்டத்தின் மூலம் 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.78000 வரை மானியம் பெறலாம்!
இலவச மின்சார திட்டத்தின் கீழ் 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.78000 வரை மானியத்தை அரசு வழங்குகிறது.
இலவச மின்சாரத் திட்டம்
பிரதம மந்திரி சூர்யா கர் இலவச மின்சாரத் திட்டத்தின் (PM Surya Ghar Free Electricity Scheme) கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புள்ளிவிவரங்களின் படி, மார்ச் 10 ஆம் திகதி வரை, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளனர்.
நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், மத்திய அரசு 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரத்தையும், பெரும் மானியத்தையும் வழங்குகிறது.
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு கூரை சூரிய மின்சக்தி முயற்சியான PM Surya Ghar Muft Bijli Yojna அல்லது PMSGMBY மார்ச் 10, 2025க்குள் 10 லட்சம் வீடுகளை சூரிய சக்தியில் இயக்குவதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 13, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 2027 ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பல மாநிலங்களில், குறிப்பாக சண்டிகர், டாமன் மற்றும் டையூவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு கட்டிடங்களில் 100 சதவீதம் கூரை சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், இந்தத் திட்டம் பிரபலமடைந்து வருகிறது.
பிரதமரின் சூரிய கர் இலவச பிஜிலி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி முதலீட்டை அரசு அறிவித்திருந்தது. இதுவரை 47.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஏற்கனவே 6.13 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,770 கோடி மானியத்தை விநியோகித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பயனாளிகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாகும். வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகின்றன. அதன் மீது அரசாங்கம் மானியம் வழங்குகிறது.
மேலும், அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை விற்கவும் முடியும். திட்டத்தின் படி சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கான செலவை பார்த்தால், 1 கிலோவாட்டிற்கு சுமார் 90 ஆயிரம் ரூபாய், 2 கிலோவாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் மற்றும் 3 கிலோவாட்டிற்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவும்போது, அரசாங்கம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புகிறது .
2 கிலோவாட் வரை ஒரு கிலோவாட்டிற்கு ரூ.30,000, 3 கிலோவாட் வரை ஒரு கிலோவாட்டிற்கு ரூ.48,000 மற்றும் 3 கிலோவாட்டுக்கு மேல் ஒரு கிலோவாட்டிற்கு ரூ.78,000 மானியத்தை அரசு வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |