மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.24 லட்சம் கிடைக்கும் சூப்பரான திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் எந்த ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme)
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு அதில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற முடியும். மேலும், அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
தற்போது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு மூத்த குடிமகனும் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குப் முதிர்ச்சியடைகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அதேபோல, இந்த திட்டம் விருப்பு ஓய்வு (VRS) எடுத்தவர்களுக்கும் பொருந்தும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் வரிவிலக்கு பெறுவீர்கள்.
ஆனால், அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். மேலும், 50,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால், வட்டிக்கு TDS விதிக்கப்படும்.
ரூ.24 லட்சம் பெறுவது எப்படி?
ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனி SCSS கணக்குகளைத் திறப்பதன் மூலம் அதிகபட்ச நன்மையைப் பெறலாம். இது அவர்களின் முதலீட்டு வரம்பை ரூ.60 லட்சமாக இரட்டிப்பாக்கும். இது காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 வழங்கும்.
அதே நேரத்தில், ஆண்டு அடிப்படையில் வட்டி வருமானம் ரூ.4,81,200 ஆக இருக்கும். அதேபோல், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது, மொத்தம் ரூ.24,06,000 வட்டி கிடைக்கும். அதாவது, இரண்டு கணக்குகளில் ரூ.60 லட்சம் முதலீடு செய்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.24 லட்சத்தை வட்டியாகப் பெறலாம்.
ஒரே கணக்கில் 30 லட்சம் வரை முதலீடு?
காலாண்டு வட்டி: ரூ.60,150
ஆண்டு வட்டி: ரூ.2,40,600
ஐந்து ஆண்டுகளில் மொத்த வட்டி: ரூ.12,03,000
மொத்த முதிர்வுத் தொகை: ரூ.42,03,000
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் மற்றும் நிதிப் பாதுகாப்பை விரும்புவோருக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |