நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை
இலங்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வகுப்புகளுக்கு தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் அனைத்தும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் இரண்டாம் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதல் தாள் 11.15 முதல் 12.15 மணி வரையிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |