புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: ஜேர்மன் தலைவர்
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தேவையில்லாமல் பிற நாடுகளில் அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார்.
இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
எலான் மஸ்கால் ஜனநாயகத்துக்கு ஆபத்து
அமெரிக்க கோடீஸ்வரரும் ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்க், தேவையில்லாமல் பிற நாடுகளில் அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார்.
பிரித்தானியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அரசியல் மற்றும் தலைவர்கள் குறித்து மரியாதையில்லாமல் விமர்சித்தும் வருகிறார் எலான் மஸ்க்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒரு கூட்டம் மக்கள், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Kay Nietfeld/dpa/picture alliance
அதே நேரத்தில், அக்கட்சிக்கும் கடும் எதிர்ப்பும் நிலவுகிறது.
விரைவில் ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், AfD கட்சிக்கு ஆதரவளிப்பதா அல்லது அதை புறக்கணிப்பதா என்னும் ஒரு குழப்பத்தில் பலர் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜேர்மனியைக் காப்பாற்ற புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சியால்தான் முடியும் என்று கூறி, அக்கட்சிக்கு ஆதரவளிக்கவேண்டுமென மக்களை வலியுறுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
இந்நிலையில், எலான் மஸ்க் பிரித்தானியா, ஜேர்மனி முதலான பல ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கிறார் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, அதனால் ஐரோப்பாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |