உக்ரைனை தொட்டால் பின்விளைவுகள் இப்படி தான் இருக்கும்! ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் பொருளாதார மற்றும் அரசியல் ரீரியிலான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யாவுக்கு ஜேர்மன் அதிபர் Olaf Scholz எச்சரித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கருங்கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு உதவுவது குறித்து பெர்லினில் பாலிடிக் அரசாங்க தலைவர்களுடன் ஜேர்மன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய Scholz, தற்போதைக்கு ஐரோப்பியாவில் போரை தவிர்ப்பது தவிர வேறு ஏதுவும் முக்கியமானதல்ல.
எங்களுக்கு அமைதி நிலவ வேண்டும். ரஷ்யா பதற்றத்தை தணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மேல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதேசமயம், ஐரோப்பிய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம் என Scholz குறிப்பிட்டுள்ளார்.