பிரான்சில் பள்ளிப்பிள்ளைகளின் புத்தகப்பைகள் ஏன் மிக பளுவானவையாக உள்ளன?
The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை இருக்கவேண்டும் என பரிந்துரை இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது.
பளுவான புத்தகப்பைகள் என்னும் பிரச்சினை, உலக நாடுகள் பலவற்றில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
பிள்ளைகள் முதுகில் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, தூக்க முடியாமல், கூன் போட்டபடி பையை இழுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் எந்த பெற்றோருக்கும் மனம் வருந்தும்.
பளுவான புத்தகப்பைகள்
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு மாணவன் அல்லது மாணவியின் பையின் எடை, அவர்களுடைய உடல் எடையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்ககூடாது என பிரான்ஸ் கல்வி அமைச்சகத்தின் பரிந்துரை ஒன்று கூறுகிறது.

அதாவது, 25 கிலோ உடல் எடையுள்ள ஒரு மாணவரின் புத்தகப்பை, 2.5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.
ஆனால், பல பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், பைல்கள், லேப்டாப், விளையாட்டு உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் என இத்தனை பொருட்களை மாணவ மாணவியர் ஒரு பையில் அடைத்துக்கொண்டு செல்வதால், அவர்கள் சுமக்கும் சுமை 17 சதவிகிதத்தைத் தாண்டிவிடுவதாக கூறுகிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
விடயம் என்னவென்றால், இவ்வளவு எடையுள்ள பையைத்தான் பிள்ளைகள் சுமக்கவேண்டும் என்பது வெறும் பரிந்துரைதான். அது விதி அல்ல.
ஆக, அதை விதியாக்கவேண்டும் என்கிறார்கள் பெற்றோரும், துறைசார் நிபுணர்களும்.
மேலும், சில புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துவிட்டுவரும் வகையில் லாக்கர்களை அமைக்கலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பளுவான புத்தகப்பைகள், பிள்ளைகளின் முகுகுக்கு பிரச்சினையை உருவாக்குவதுடன், நிலைமையை மேலும் மோசமாக்கவும் கூடும்.
ஆக, பெற்றோரும், பிள்ளைகளின் பைகளை சோதித்து, இன்று எந்தெந்த புத்தகங்களைக் கொண்டு சென்றால் போதும் என்பதை கவனித்து தினமும் தேவையான புத்தகங்கள், நோட்டுகளைக் கொடுத்துவிடுவதாலும் பிரச்சினைகளை சிறிது குறைக்கலாம்.
சில நாடுகளில், ஒரு முழு புத்தகத்தையும் ஆண்டு முழுவதும் ஒரு மாணவன் அல்லது மாணவி தூக்கிக்கொண்டு செல்லாமல், ஒரு பருவத்துக்கு (Term) இவ்வளவு பாடம் என திட்டமிட்டு புத்தகங்களை அச்சிடும் நிலை உள்ளது. அதையும் பின்பற்றலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |