12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்! மேலும் 2 இளைஞர்கள் சரிந்து விழுந்து உயிரிழப்பு
இந்திய மாநிலம் குஜராத்தில் 12 வயது சிறுவன் உட்பட மூவர் மாரடைப்பால் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மரணம்
குஜராத்தின் துவாரகா மாவட்டம் விஜாப்பூர் கிராமத்தில் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவன் துஷ்யந்த் பிப்ரோதர் (12).
இவர் தனது வீட்டின் முற்றத்தில் அதிகாலை வேளையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்த துஷ்யந்தை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சிறுவனின் மரணம்
அவரது பள்ளி மற்றும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இளைஞர் சரிந்து விழுந்து மரணம் இதேபோல் நிமித் சத்ரானி (23) என்ற நபர் சாஸ்திரிநகர் - அஜ்மீரா பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தெரிய வந்தது. நிமித்தின் பெற்றோர் அவர் பல மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருந்ததாகவும், வங்கி ஒன்றில் நேர்முகத்தேர்வுக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
Getty Images/iStockphoto
பேரதிர்ச்சி சம்பவம்
ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் வகாசியா என்ற 24 வயது நபரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்த வகாசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தற்செயலான மரணம் என பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததாக தெரிவித்தனர்.
குஜராத் மாநிலத்தில் சிறுவன் உட்பட மூவர் மாரடைப்பால் மரணமடைந்தது பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Representational Image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |