தந்தைக்கு ஏற்பட்ட விபத்து! குடும்ப பொறுப்பை கையில் எடுத்த 7 வயது சிறுவன்.. வைரலாகும் வீடியோ
இந்தியாவில் 7 வயது சிறுவன் பள்ளி முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராகுல் மிட்டல் என்ற நபர் பதிவிட்ட அந்த வீடியோவில், உணவு விநியோகம் செய்ய வந்த 7 வயது சிறுவனிடம் பயனாளி கதையை கேட்கிறார். அப்போது, தனது தந்தை சமீபத்தில் விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டதால், குடும்ப வருமானத்திற்காக இந்த பணியை கையில் எடுத்து செய்வதாக அந்த சிறுவன் கூறுகிறார்.
மேலும், பகலில் பள்ளிக்கு செல்லும் சிறுவன், மாலை வீடு திரும்பியவுடன் 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை உணவு விநியோகம் செய்கிறார். இதனையும் அவரே வீடியோவில் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோவை பதிவிட்ட ராகுல் மிட்டல், சிறுவனை ஊக்குவிப்பதுடன் தந்தையின் கால் குணமடைய நாம் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Hello rahul .. plz direct msg me his details or yours https://t.co/FiDDIa2DBy
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 4, 2022
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் சிறுவனுக்கு உதவிட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹலோ ராகுல் தயவு செய்து சிறுவன் குறித்த விவரங்களை எனக்கு அனுப்பவும் என கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.