பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சிறுமி! தமிழகத்தை உலுக்கிய வழக்கில் வெளியான தீர்ப்பு
2012ல் தமிழகத்தில் பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் கைதான 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த சிறுமி
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தின் வாகனத்தில் பயணித்த சிறுமி சுருதி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 2012 ஜூன் 25ல் நடந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
#BREAKING | 2012ம் ஆண்டு தாம்பரம் அருகே பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து உயரிழந்த சிறுமி சுருதி வழக்கில் 8 பேரும் விடுதலை
— DON Updates (@DonUpdates_in) January 25, 2023
சிறுமி சுருதி உயிழிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு pic.twitter.com/tsAzyuZ6Li
விடுதலை
10 ஆண்டுகளாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி இன்று தீர்ப்பு வழங்கினார்.