பிரான்சில் மரத்தின் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து: பல மாணவர்கள் காயம்
School bus crash in france several student injured: பிரான்சில் பள்ளி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் பள்ளி பேருந்து விபத்து
கிழக்கு பிரான்ஸின் ஏன்(Ain) மாகாணத்தில் உள்ள லென்ட் நகராட்சியில் வெள்ளிக்கிழமை பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் இருந்து விலகிய பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த பேருந்து விபத்தில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிலிப் தபரோ(Philippe Tabarot) மீட்பு பணிகளை நேரில் சென்று துரிதப்படுத்தினார்.
பள்ளி பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பிரான்ஸ் நாட்டின் கல்வித் துறை அமைச்சர் எட்வார்ட் கெஃப்ரே ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும், நம்முடைய குழந்தைகளும், மாணவர்களும் இதுப் போன்ற விபத்துக்களில் சிக்குவது என்பது மிகவும் வேதனையான விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.