வடக்கு அயர்லாந்தில் சாலையில் கவிழ்ந்த பள்ளி பேருந்து: 4 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
வடக்கு அயர்லாந்தின் கவுண்டி டவுன் பகுதியில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததை தொடர்ந்து மிகப்பெரிய விபத்து சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி பேருந்து விபத்து
காரோடோர்(Carrowdore) கிராமத்திற்கு அருகே உள்ள பாலிபிளாக் சாலையின் கிழக்குப் பகுதியில் இரட்டை அடுக்கு பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது.
பேருந்து விபத்துக்குள்ளாகும் போது சாரதி மற்றும் 43 மாணவர்கள் பயணித்ததாக தெரியவந்துள்ளது.
அதில், 4 பேர் வரை காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
$4.4 பில்லியன் சொத்து மதிப்பு…இந்திய பில்லினருக்கு நேர்ந்த அவமதிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் ஷோரூமில் நடந்த கதை
மீதமுள்ள பயணிகள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்று அனுப்பப்பட்டனர்.
வட அயர்லாந்து ஆம்புலன்ஸ் சேவை (NIAS), தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள், பொலிஸ் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
அத்துடன், வான் ஆம்புலன்ஸ் மற்றும் மேம்பட்ட மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர், மேலும் ஐந்து தீயணைப்பு கருவிகள் மற்றும் ஒரு சிறப்பு மீட்பு குழுவும் அனுப்பப்பட்டன.
வட அயர்லாந்து செயலாளர் Hilary Benn, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |