கனடாவில் விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்து: பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
கனடாவின் ஒன்ராறியோவில் பள்ளிப்பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து
கனடாவின் Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள Kitchener Waterloo Collegiate என்னும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்வதற்காக தங்கள் பள்ளிப்பேருந்தில் புறப்பட்டுள்ளார்கள்.

காலை 9.40 மணியளவில், லண்டன் என்னுமிடத்துக்கு அருகில் வரும்போது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிந்துள்ளது.
#MiddlesexOPP responded to a single motor vehicle collision involving a school bus on Highway 401 in the westbound lanes just West of Veterans Memorial Parkway in the City of London.
— OPP West Region (@OPP_WR) November 2, 2025
The school bus had 42 passengers, and 4 were transported to the hospital with minor injuries.… pic.twitter.com/vDBax54IqW
பேருந்தின் சாரதியான 52 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பிள்ளைகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், சாரதிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால்தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகவும் சில மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பேருந்தில் 42 பேர் இருந்த நிலையில், சில பிள்ளைகளே அவசர வழியின் கதவைத் திறந்து மற்ற மாணவ மாணவிகளை பேருந்திலிருந்து வெளியே வர உதவியிருக்கிறார்கள்.
விபத்தில் காயமடைந்த நான்கு பேர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
பிள்ளைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |